தூத்துக்குடியில் புதிதாக 86 போலீசார் பணியில் சேருகின்றனர் .!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட 86 போலீசார் பணியில் சேர உள்ளனர்.
தமிழகத்தில் காலியாக உள்ள இரண்டாம் நிலை போலீசார், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பு துறை காவலர்கள் உள்ளிட்ட 8,888 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வுகள் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்றவர்களுக்கான உடல்கூறு தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை ஆகியவை முடிந்துவிட்டன.
இவர்களுக்கு பயிற்சி கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி தொடங்கவில்லை. இதனால், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பயிற்சிக்கு அழைக்காமல் நேரடியாக கொரோனா பாதுகாப்பு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில், அவர்களிடம் இருந்து பணி ஆணை பெற்று கொள்கின்றனர். அவர்கள் அங்கு நடக்கும் சிறு அடிப்படை பயிற்சிக்குபிறகு உடனடியாக தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் 86 பேர் நாளை மறுநாள் பணியில் சேருகின்றனர்.