தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 3,75,596 பேர் கைது
தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 3,75,596 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருக்கும்போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து வருகின்றனர். மேலும் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு போலீசார் வித்தியாசமான முறையில் தண்டனைகள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே வந்த 3,75,596 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை 3,56,526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வெளியே சுற்றிய 3,17,027 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு,3,64,60,219 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.