தமிழகத்தில் 12 மாவட்டகளை “ஹாட் ஸ்பாட்” அறிவித்த மத்திய அரசு .!

தமிழகத்தில் சென்னை உட்பட 12 மாவட்டங்களை சிவப்பு மண்டலமாக மத்திய அரசு அறிவிப்பு.
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 40 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிய உள்ளது. இதையெடுத்து, கொரோனா பாதித்த 733 மாவட்டங்களை மத்திய சுகாதாரத்துறை சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மூன்று மண்டலங்களாக பிரித்துள்ளது.
இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும், 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகவும் உள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள, சிவப்பு மண்டலங்களில் நாளை மறுநாளுக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படலம், ஆரஞ்சு மண்டலங்களில் ஓரளவு கட்டுப்பாடும் தளர்வும், பச்சை மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு அறிவித்த சிவப்பு மண்டலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14, உத்தரப்பிரதேசத்தில் 19, தமிழகத்தில் 12, டெல்லியில் 11 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 12 சிவப்பு மண்டலங்கள், 24 ஆரஞ்சு மண்டலங்கள் மற்றும் 1 பசுமை மண்டலம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த மலையாள இயக்குநர்கள் 2 பேர் கைது.!
April 27, 2025