நிவாரணம் வேண்டும் ! மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மின்னஞ்சல் அனுப்பி போராட்டம்
மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மின்னஞ்சல் அனுப்பி நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீட்டிலே முடங்கியுள்ளனர்.இதனால் அன்றாடம் வேலை செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதாவது பிரதமர். ஆளுநர், முதலமைச்சர் , தலைமை செயலருக்கு மின்னஞ்சல் அனுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர்.சுமார் 50,000 மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.