#BREAKING: சென்னையில் 2 மாத குழந்தைக்கு கொரோனா.!
சென்னையில் 2 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்றுவரை 2,162 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இன்று 48 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 1,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று பாதிக்கப்பட்ட 161 பேரில் 138 பேர் சென்னைவாசிகள். இதனால், சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், சென்னையில் இன்று 2 மாத குழந்தைக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்குட்பட்ட 142 பேருக்கு தொற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.