நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர்
கொரோனா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.எனவே ஒரு சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 9 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு இல்லாததால் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழக அரசின் உத்தரவுப்படி மே 4 -ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்பட உள்ளது .