ஜப்பான் பிரதமர் பதவிக்கு நில ஒதுக்கீட்டு ஊழல் புகாரால் ஆபத்து!
பிரதமர் ஷின்சோ அபே மற்றும் நிதியமைச்சர் தாரோ அசோ ஜப்பானில் நில ஒதுக்கீட்டு ஊழல் புகாரால் ஆகியோரின் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் கல்வி நிறுவனத்திற்கு குறைந்த விலையில் விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலத்தின் ஒதுக்கீட்டைப் பெற்ற தனியார் நிறுவனம் பிரதமர் ஷின்சோ அபே-வின் மனைவி Akie-க்கு நெருக்கமானவர்களால் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நில ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்களிலிருந்து ஷின்சோ அபேவின் மனைவியின் பெயர் நீக்கப்பட்டதாகவும், இதில் பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு தொடர்பிருப்பதாக புதிய ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளதால் இருவரும் பதவி விலக வேண்டும் என எதிர்த்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.