மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை

மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.ஊரடங்கு முடிவடையுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ஒரு சில மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பிரதமர் மோடி மே 3-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பதை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார் என்ற தகவல் வெளியாகியது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட மருத்துவ குழுவுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025