கொரோனாவிலிருந்து தப்ப மக்கள் ஏ.சிகளின் வெப்பநிலையை கட்டுப்பாட்டில் வைக்க மத்திய அரசு அறிவுரை…
நாளை முதல் மே மாதம் தொடங்குகிறது. இந்த மாதத்தில் சூரியனின் உக்கிரம் சற்று அதிகமாக இருக்கும் இந்த கோடைகாலத்தில் அதிலிருந்த தப்ப பல வழிகளில் மக்கள் வெப்பத்தை தனித்து வருகின்றனர். ஆனால் தற்போது நிலவுவது கொரோனா காலம் ஆகும்.
கோடை காலம் என்றாலே அனைவரும் கோடை வெப்பத்தை தவிர்க்க எல்லோரும் குளிர்சாதனப் பெட்டிகளை (ஏ.சி. எந்திரங்கள்) இயக்கி, சில்லென்ற குளிரில் நமது உடலை வெப்பத்திலிருந்து காத்துக்கொள்ள விரும்புவோம். ஆனால் தற்போது பேரழிவு உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பரவி வருகிற இந்த சூழ்நிலையில், ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்களை 24 டிகிரி முதல் 30 டிகிரி என்ற அளவில் வைத்துக்கொள்ளுமாறு குளிர்சாதனங்களை பயன்படுத்தும் மக்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதேபோல ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவுரைகள் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்குத்தான் என்பதை புரிந்து கொண்டு மக்கள் இந்த அறிவுரையை ஏற்று நடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது