தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை

Default Image

தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது.இதனிடையே வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று தெரிவித்தது.ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்தது.

இந்நிலையில் தான் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.குறிப்பாக
நாகப்பட்டினம்,புதுக்கோட்டை,தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்