கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்!

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கிய எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் நோயின் தீவிரம் அதிகரித்து வருவதால், இதற்க்கு மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பிரதமர் மற்றும் அந்தந்த மாநில முதல்வர்களும் மக்கள் தங்களால் இயன்ற உதவியை செய்யுமாறு கூறியிருந்தனர். அதன்படி பிரபலங்கள் மற்றும் பல பொதுமக்களும் இதற்காக நிவாரண நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு குறித்த ஆய்வுக்கூட்டத்தில் மின்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, கொரோனா நிவாரண நிதியாக எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 10 லட்சம் ரூபாயும், நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 5 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும், யுனைடட் வெல்ஃபேர் அறக்கட்டளை சார்பில், 3 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்த சீசன் 6 தோல்வி…மன வேதனையில் குமுறிய பாட் கம்மின்ஸ்!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் சம்பவம்…பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த முக்கிய முடிவுகள்?
April 24, 2025
SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!
April 23, 2025