ரிஷிகபூர் இறந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை – கமல்ஹாசன்..!

கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ரிஷிகபூர் மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் ரிஷி கபூர், இவரது தந்தையான ராஜ் கபூர் இயக்கிய ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் முதன்முதலாக ஹீரோவாக அறிமுகமானார். இவர் கடைசியாக ‘தி பாடி’ படத்தில் இம்ரான் ஹாஷ்மியுடன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு மூச்சு திணறல் காரணமாக ஏப்ரல் 29அன்று மும்பையில் உள்ள சர். ஹெச். என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் பாலிவுட் இளம் நடிகரான ரன்பீர் கபூரின் தந்தையாவார். இவர் ஏற்கனவே புற்று நோய்க்கு நியூயார்க்கில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பல பாலிவுட் மற்றும் கோலிவுட் நடிகர்கள் உட்பட பலர் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ரிஷிகபூர் மறைந்து விட்டார் என்பதை நம்பவே முடியவில்லை. அவர் எப்போது சிரித்த முகத்துடன் உள்ளவர். எங்கள் இருவருக்குள்ளும் பரஸ்பர அன்பும், மரியாதையும் இருந்தது. எனது நண்பரை இழந்து விட்டேன். அவரது குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Cant believe it. Chintu ji @chintskap. (Mr.Rishi Kapoor) was always ready with a smile. We had mutual love and respect. Will miss my friend. My heartfelt condolence to the family.
— Kamal Haasan (@ikamalhaasan) April 30, 2020