‘வடகொரியா அதிபர் உயிருடன் இருக்கிறார்- முன்னாள் தூதரக அதிகாரி தகவல்
கிம் உயிருடன் இருக்கிறார் என்று வடகொரியா முன்னாள் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் பொது இடங்களில் தலை காட்டாமல் உள்ளார். இதனால் அமெரிக்க உளவுத் துறையை சந்தேகத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து கிம் ஜாங் உன் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும், இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன.
கிம் ஜாங் உன் கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப் பட்டிருக்கலாம் என அல்ஜஜீரா செய்தித் நிறுவனம் தெரிவித்தது. பின்னர் கிம் இறந்துவிட்டதாக சமீபத்தில், ஹாங்காங் சேட்டிலைட் தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இதனிடையே வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னின் உடல்நலம் குறித்து வெளியாகும் அதிகாரபூர்வமற்ற செய்திகளுக்கு, அதிபர் கிம் ஜாங் உன் “உயிருடன் இருக்கிறார்” என்று தென் கொரியா உறுதியாக கூறியுள்ளது.
இந்நிலையில், வட கொரிய தூதரக பணியிலிருந்தும், அந்த நாட்டை விட்டும் வெளியேறிய தே யோங் ஹோ கூறுகையில், கிம் ஜாங் உயிருடன் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவரால் தற்போது நிற்கவோ, நடக்கவோ முடியாது என்று கூறியுள்ளார்.