உழைப்பாளர் தினம் உருவாகிய வரலாறு தெரியுமா? வாருங்கள் பார்ப்போம்!

Default Image

செய்யும் தொழிலே தெய்வம் என வாழும் உழைப்பாளருக்கு சிறந்த தினம் மே 1 இன்று.

உலகம் முழுவதும் உழைப்பாளர்கள் தினமாக கருதப்படும் மே 1 உழைப்பாளர் தினம் உருவனதே ஒரு போராட்டத்தில் தான். பல நாடுகளில் வேலை செய்பவர்கள் முழு நேரமாக 12 முதல் 18 மணி நேரங்கள் வரை வேலை செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்ட்டனர்.

இந்த சூழலில் இங்கிலாந்தின் சாசன இயக்கம் 6 கோரிக்கைகள் கொண்ட போராட்டங்களை நடத்தியது. அதில் முக்கியமானது வேலை நேரத்தை குறைப்பதாக தான் இருந்துள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துடன் இணைந்து அமெரிக்கா, ரஷ்யா, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அரசுக்கு எதிராக போராட்டங்களை வலுக்க செய்துள்ளனர். இவர்கள் அனைவரின் கோரிக்கையும் வேலை நேரத்தை 8 மணி நேரமாக குறைக்க வேண்டும் என்பது தான்.

அதன் பின்பு மே 1 ஆம் தேதி 1886 ஆம் ஆண்டு இந்த போராட்டம வலுத்தது. அமெரிக்காவில் அமைதியான முறையில் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் பலர் காவலர்களின் தாக்குதலால் உயிரிழந்தனர்.

இவர்களின் இறுதி ஊர்வலத்தில் 5 லட்சம் பேர் கலந்துகொண்டதால் அன்றைய தினம் கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அதன் பிறகு நடத்திய பல போராட்டங்கள் மற்றும் கூட்டங்களால் மே 1 உழைப்பாளர் தினமாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இத்தகைய தொழிலாளர்களின் உயிர் தியாகமும், பல நாடுகளின் தன்னலம் மிக்க போராட்டங்களும் தான் மே மாதம் 1ஆம் தேதியினை உழைப்பாளர் தினமாக கொண்டாட காரணமாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்