மருத்துவ குழுவோடு முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மருத்துவ குழுவோடு முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக முதலில் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னர் ஊரடங்கு மே 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, மே 3-ஆம் தேதியுடன் முடிவடையுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் ஒரு சில மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பிரதமர் மோடி மே 3-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பதா? வேண்டாமா? என்பதை அறிவிப்பதாக தெரிவித்திருந்தார் என்ற தகவல் வெளியாகின. இந்நிலையில், இன்று முதலமைச்சர் பழனிசாமி 19 பேர் கொண்ட சிறப்பு மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.