திருநெல்வேலியில் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டில் மானிய விலையில் சர்கரையின் விலை உயர்த்தப்பட்டது .இது இன்று முதல் அமலுக்கு வந்தது .இந்நிலையில் விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது .திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தாசில்தார் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர் .ஏற்கனவே அனைத்து பொருள்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு
வரும் நிலையில் சர்க்கரை விலையையும் உயர்த்தியதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.