கொரோனாவில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமருக்கு ஆண் குழந்தை!
கொரோனாவில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமருக்கு ஆண் குழந்தை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தான் தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை உலகம் முழுவதும், 3,138,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 218,010 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து மீண்டு எழுந்துள்ளார்.
இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரது நிச்சயிக்கப்பட்ட காதலி கேரி சைமண்ட்ஸ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மேலும், இவருக்கு ஏற்கனவே 6 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.