5 நிமிடத்தில் பிரைட் நூடில்ஸ் செய்வது எப்படி? வாருங்கள் பாப்போம்!
பொதுவாக தற்போது இயற்கையாக இட்லி, தோசை ஆகிய பாரம்பரிய உணவுகளை தவிர்த்து துரித உணவுகளை தான் மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். ஏனென்றால் அதை சமைக்க ஆகும் களமும் மிக குறைவு. தற்போது எப்படி சுவையான பிரைட் நூடில்ஸ் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை
- மேகி
- முட்டை
- பீன்ஸ்
- கேரட்
- உருளைக்கிழங்கு
- பட்டாணி
- வெங்காயம்
- வெள்ளை பூண்டு
- எண்ணெய்
செய்முறை
முதலில் மேகியை கொதிக்கும் நீரில் போட்டு அவிந்ததும் இறக்கி வடிக்கவும், பின்பு குளிர்ந்த நீரால் ஒரு முறை அலசவும். அதன் பிறகு ஒரு சட்டியில் என்னை ஊற்றி வெங்காயம் வெள்ளை பூண்டு ஆகியவை சேர்த்து வதக்கவும்.
அது வதங்கியதும் எடுத்துவைத்துள்ள முட்டையி போட்டு வதக்கவும். காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ளவும். பின் வடித்து வைத்துள்ள மேகியை போட்டு கிளறிவிட்டு, டேஸ்ட் மேக்கர் கொடுக்கப்பட்டிருக்கும். அதை கலந்து இறக்கினால் அட்டகாசமான பிரைட் நூடில்ஸ் தயார்.