நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது – தினகரன்
காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
தன்னிச்சையாக செயல்படும் அமைப்பாக அறிவிக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தை, மத்திய அரசின் நீர்வளத்துறையான ஜல்சக்தி துறையின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு.
இந்நிலையில் இது குறித்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையில், காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய நீர்வள அமைச்சகத்துடன் இணைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. உடனடியாக அதை ரத்து செய்ய வேண்டும்.மத்திய அரசு இதைச் செய்வதற்கு தமிழகத்தை ஆளும் எடப்பாடி பழனிசாமியும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நாற்பதுக்கும் மேற்பட்ட எம்.பி.க்களை வைத்திருக்கும் தி.மு.க.வும் உரிய அழுத்தங்களைத் தரவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.