ஒவ்வோரு பிரச்சினைக்கும் ஒரு முடிவு உள்ளது – அதுல்யா…!

அதுல்யா ரவி, தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவர். இவர் காதல் கண் கட்டுதே படத்திற்கு பின் துரை இயக்கத்தில் ஏமாளி படத்திலும், சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்தார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது . இதனால் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதன் மூலம் பல பிரபலங்கள் ஜாலியான மற்றும் த்ரோபேக் வீடியோவையும், புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த ஊரடங்கில் வழக்கமாக புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிடும் இவர் தற்போது ஒரு படப்பிடிப்பின் போது சாலையில் கியூட்டான சிரிப்புடன் நடப்பதை போன்று எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதனுடன் படப்பிடிப்பு நாட்களை மிஸ் செய்வதாகவும், 2020ன் எதிர்மறையான சொல் நேர்மறையானது, அது கோவிட் 19ஆகும் என்றும், ஆனால் ஒவ்வோரு பிரச்சினைக்கும் ஒரு முடிவு உள்ளது என்பது நம்பிக்கை என்றும், ஒன்றாக வலுவாக இருப்போம் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
உறுதியானது அதிமுக – பாஜக கூட்டணி! அமித்ஷா அறிவிப்பு!
April 11, 2025
தமிழ்நாடு பாஜகவின் 13வது தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்!
April 11, 2025