சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை-கனிமொழி

மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் சுகாதார பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில் திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில்,கொரோனா சிக்கலைக் கையாள்வதில், அரசின் தவறுகளை எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டுவதில் குறை காணும் முதல்வர் பழனிசாமி , சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி பொது மருத்துவமனை மருத்துவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களில் விரிவான செய்திகள் வந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் ஆபத்தானது. இது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சிக்கல்களைக் களைய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஊடகங்களில் விரிவான செய்திகள் வந்த பின்னரும் நடவடிக்கை எடுக்காதது மிகவும் ஆபத்தானது. இது பெரும் சிக்கலுக்கு வழிவகுக்கும். 2/2
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 29, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025