ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா உறுதி
சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,058 உயர்ந்தது. நேற்று பாதிக்கப்பட்ட 121 பேரில், சென்னையில் இன்று மட்டும் 103 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.நேற்று 103 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் பாதிப்பு எண்ணிக்கை 673 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.சென்னை மந்தை வெளி பகுதியை சேர்ந்த சூப்பர் மார்க்கெட் வைத்திருப்பவர் , அவரது மனைவி, மகள், மகன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.இதனால் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.மேலும் அவர் சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டு ,அதற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.