ரேபிட் டெஸ்ட் கருவிகள் விவகாரம்.! சீன தூதரகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை.!

Default Image
ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது தொடர்பாக சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய பயன்படும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை மத்திய அரசானது சீனாவிடம் இருந்து வாங்கியது. ஆனால், அந்த கருவிகளில் இருந்து சரியான முடிவு தெரியவராததால் சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பொருட்களை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது.
இந்த விவகாரம் குறித்து, டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா வைரஸ் தற்போது மனித குலத்தின் பொது எதிரி. அதனை வெல்ல கூட்டாக செயல்படுவது முக்கியம். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா இடையே நல்ல தகவல் தொடர்பு நிலவி வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனது அனுபவங்களை இந்தியாவிடம் சீனா பகிர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகவும் வழங்கியுள்ளது. சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களானது தரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில், சிலர், சீன பொருட்கள் தரமற்றவை என்று குற்றச்சாட்டு கூறுவது நியாயமானது அல்ல. காரணங்களை முன்கூட்டியே உருவாக்கிக்கொண்டு குறை சொல்கிறார்கள்.
இதே கருவிகள் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இக்கருவிகள் நன்றாக செயல்படுகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய மதிப்பீடு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சீனாவின் உண்மைத்தன்மையை இந்தியா மதித்து நடக்கும் என்று நம்புகிறோம். சீன நிறுவனங்களுடன் கலந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெறும் என நம்புகிறோம்.’ என சீன தூதரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்