கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை வேண்டாம், ஆபத்தானது – மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர்

Default Image

கொரோனாவுக்கு பிளாஸ்மா சிகிச்சை ஆபத்தானது என்று  மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அதனால் அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, ரத்தத்தில் இருந்து அவற்றை பிரித்தெடுத்து கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை என்று கூறப்படுகிறது. இதனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பிளாஸ்மா சிகிச்சையை பரிந்துரை செய்துள்ளது. டெல்லி, கேரளா, குஜராத் மற்றும் பஞ்சாப் போன்ற பல மாநிலங்கள் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சையைப் பயன்படுத்த தொடங்கியுள்ளன.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறுகையில், பிளாஸ்மாவை  சிகிச்சைகாக பயன்படுத்தப்படலாம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை .ஐ.சி.எம்.ஆர் பிளாஸ்மாவின் செயல்திறன் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது . இதனால் பிளாஸ்மாவை சோதனை நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்த  வேண்டும். மேலும் பிளாஸ்மா சிகிச்சையை சரியான முறையில் பயன்படுத்தாவிட்டால், அது உயிருக்கு ஆபத்தை ஏற்படும் என்றும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்