அதிர்ச்சி ரிப்போர்ட்.! 100 கோடி பேர் கொரோனாவால் பாதிப்பு.! 32 லட்சம் உயிரிழப்பு.!
கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள். 32 லட்சம் பேர் உயிரிழக்கும் சூழல் ஏற்படும். – பன்னாட்டு மீட்பு குழு (IRC -International rescue committee)
தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் பேரிடராக இருக்கிறது கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பு. இந்த தொற்றானது வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என பேதமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது.
இந்த கொரோன வைரஸால், இதுவரை உலக முழுக்க 31,38,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,18,010 பேர் இந்த கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 9,56,064 பேர் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் பன்னாட்டு மீட்பு குழு அமைப்பானது (IRC -International rescue committee) அண்மையில் தனது இணையதள பக்கத்தில் ஒரு செய்தி குறிப்பை வெளியிட்டது. அதில், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 100 கோடி பேர் வரையில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும், 32 லட்சம் பேர் வரையில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்கத்தால், ஆப்கானிஸ்தான், ஏமன், சிரியா போன்ற நாடுகள் மிகவும் பாதிக்கப்படும். எனவும் குறிப்பிட்டு விரிவான செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது.
கொரோனாவால் 100 கோடி பேர் பாதிக்கப்படுவார்கள் என்ற செய்தியானது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Our analysis shows the world could see up to 1 billion infections and 3.2 million deaths due to #COVID19 in 34 crisis-affected countries served by the IRC, including warzones like Afghanistan, Syria, and Yemen.
The time to act is now. Learn more: https://t.co/PjKMbiqXSi pic.twitter.com/N3zUP00qSg— IRC – International Rescue Committee (@RESCUEorg) April 28, 2020