மருத்துவமனையில் இருந்து கொரோனா நோயாளி ஓட்டம்.!

Default Image

ராஜிவ்காந்தி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்த கொரோனா நோயாளி தப்பித்து வீட்டிற்கு சென்று விட்டார்.

சென்னையில் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகத்தில் மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில், 47 பேர் சென்னையை சார்ந்தவர்கள்.

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த 45 வயது நபருக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரை ராஜிவ்காந்தி மருத்துவமனை தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று இரவு அந்த நபர் அங்கிருந்து தப்பித்து வீட்டிற்கு வந்துவிட்டார். இதனையறிந்த, போலீசார் அவரின்  வீட்டிற்கு சென்ற போது அந்த நபர் , என்னை யாராவது பிடிக்க முயற்சி செய்தால், அவர்களை கட்டிபிடிப்பேன் என மிரட்டி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
TNPSC MainExam
ByeElection
ind vs eng 2 odi
seeman about stalin
t20 world cup 2024
Vikram Misri