செப்டம்பர் மாத இறுதி வரையில் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை செப்டம்பர் மாதம் வரையில் மூடப்படுவதாக பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்தார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் வங்காள தேசத்திலும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்நாட்ட்டில் இதுவரை 5,913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 152 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதனால், அந்நாட்டில், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் ஷேக் ஹசீனா, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களை செப்டம்பர் மாதம் வரையில் மூட உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்தும் கடந்த மார்ச் 17-ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அதிகாரிகளுடனான ஆலோசனைக்கு பின்னர், செப்டம்பர் மாத இறுதி வரையில் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட முடிவு உத்தரவிடப்பட்டுள்ளது.