கேரளாவில் சமூக இடைவெளியை கடைபிடிக்க குடைபிடிப்பது கட்டாயம் .!
கேரளாவில் உள்ள தண்ணீர்முக்கோம் பகுதியில் யார் வெளியே சென்றாலும் குடைபிடிப்பது கட்டாயம் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
தற்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.இந்தியாவில் , கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்வர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸால் 481 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில் கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டது. இதனால், 355 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
இதையெடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளியை கட்டாயம் கடைப்பிடிக்க ஆலப்புழாவில் நூதன உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த தண்ணீர்முக்கோம் பகுதியில் யார் வெளியே சென்றாலும் குடைபிடிப்பது கட்டாயம் என கிராமப் பஞ்சாயத்து அறிவித்துள்ளது.