பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு 3 ஆண்டுகள் தடை !
பாகிஸ்தான் வீரர் உமர் அக்மலுக்கு மூன்று ஆண்டுகள் தடை.உ
உமர் அக்மல் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர பேட்ஸ்மன் மற்றும் பகுதி நேர ஸ்பினர் ஆவர். இவர் பாகிஸ்தான் அணியில் 16 டெஸ்ட் போட்டிகள், 121 ஒருநாள் போட்டிகள், 84 டி20 போட்டிகளிலில் விளையாடி உள்ளார்.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் “ஒரு போட்டியில் 2 பந்துகளை தவிர்த்தால் எனக்கு 2 லட்சம் அமெரிக்க டாலர்களும் மற்றும் இந்தியாவிற்கு எதிரான இரண்டு போட்டிகளில் ஆடாமல் இருக்கவும் என்னிடம் விலை பேசப்பட்டது” என்று கூறியுள்ளார்.
இவர் இதுதொடர்பாக ஊழல் எதிர்ப்பு அமைப்பில் தெறிவிக்காத நிலையில் ஐசிசி ஊழல் எதிரப்பு சட்டமான 2.4.4 மற்றும் 2.4.5 இன் படி உமர் அக்மலுக்கு 3 ஆண்டு அனைத்து வித போட்டிளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளனர்.