ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தெற்கு ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்!
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தெற்கு ரயில்வேயின் சிறப்பு ஏற்பாடுகள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தீவிரமான முயற்சிகள் நடைபெற்று வருகிற நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், கட்டாயமாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஊரங்கிற்கு பின் ரயில்கள் இயக்கப்பட்டால், மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தெற்கு ரயில்வே சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னையில் உள்ள சென்ரல் ரயில் நிலையத்தில், நாள் ஒன்றிற்கு 71 ரயில்கள் இயக்கப்படுகிறது. 3 லட்சத்திற்கும் மேலானோர் வந்து போகின்ற இந்த ரயில் நிலையம், ஊரடங்கு உத்தரவால், வெறிச்சோடி காணப்படுகிறது.
இதனையடுத்து,ஊரடங்கிற்கு பின் ரயில்கள் இயக்கப்படும் போது, மக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் ரயில் நிலைய நடைமேடைகளில் 6 அடி இடைவெளியில் கோடுகள் வரையப்பட்டுள்ளது. இதே போன்று டிக்கெட் வாங்கும் இடத்திலும் இப்படி கோடுகள் வரையப்பட்டுள்ளது. குறிப்பாக ரயில் நிலையத்திற்கு பயணிகள் வரும் போது, கண்டிப்பாக முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.