மகாராஷ்டிரா – ஒடிசா 1700 கி.மீ மிதிவண்டியில் சொந்த ஊருக்கு சென்ற இளைஞர் !
மகாராஷ்டிரா – ஒடிசா 1700 கி.மீ மிதிவண்டியில் 7 நாட்கள் பயணித்து சொந்த ஊருக்கு சென்ற இளைஞர்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக தொற்றை தடுக்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த இளைஞர் மகேஷ் ஜனா கொரோனா ஏப்ரல் 1ம் தேதி மிதிவண்டியில் சொந்த புறப்பட்டார். அவர் 7 நாட்களில் 1700கி.மீ கடந்து சொந்த ஊர் ஒடிசா வந்தடைந்தார்.
இவர் தினமும் 14 மணி நேரம் மட்டும் மிதிவண்டியில் பயணிப்பதாகவும் இரவு நேரங்களில் அருகில் கோவிலில் உறங்கிவிட்டுக் காலையில் பயணத்தை மீண்டும் தொடர்வதாக கூறியுள்ளார்.