கொரோனா பாதித்தவர்கள் தங்கள் வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொள்ளலாம்.!
கொரோனா பாதித்த நபர் தன்னை தானே அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். ஏனெனில், ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்த முடியாது – மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர். அதில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி பேசுகையில், ‘கொரோனா பாதித்த நபர் தன்னை தானே அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம். ஏனெனில், ஒரு நபருக்காக லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு அனைவரையும் தனிமைப்படுத்த முடியாது .’ எனவும்,
மேலும், ‘ மத்திய அரசானது கூறும் கருத்துகளுக்கும்., செயற்படுத்த போடப்படும் உத்தரவுகளுக்கும் பல முரண்பாடுகள் உள்ளன. ஊரடங்கை கண்டிப்பாக கடைபிடிக்க மத்திய அரசு வலியுறுத்துகிறது. ஆனால், மறுபுறம் கடைகளை திறக்க தளர்வு என அறிவிக்கிறது. ‘ என மத்திய அரசை சாடினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி.