மென்மையான கூந்தலை பெற வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!
மென்மையான கூந்தலை பெற சூப்பர் டிப்ஸ்.
இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது அழகை மெருகூட்ட பல வழிகளை மேற்கொள்கின்றனர். கொஞ்சம் வசதியானவர்கள், பணத்தை செலவு செய்து, எப்படிப்பட்ட கெமிக்கல் கலந்த மருந்துகளையும் உபயோகிக்கின்றனர். இவ்வாறு பயன்படுத்தும் போது, அது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் மென்மையான கூந்தலை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
தேவையானவை
- தேங்காய் எண்ணெய்
- காற்றாலை ஜெல்
செய்முறை
முதலில் ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் மற்றும் காற்றாலை ஜெல்லை நன்கு கலந்து, தலைமுடி வேர்களில் நன்கு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
இவ்வாறு செய்வதன் மூலம், வேர்களில் நிறைந்திருக்கும் இறந்த செல்களை நீக்க உதவும். மேலும், இது கூந்தலின் நீளத்தை அதிகரித்து, ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. கற்றாழை ஜெல்லை நன்கு தேய்த்துகுளித்து வந்தால் தலைமுடி கொட்டுவது குறைந்து அடர்த்தியான, மென்மையான கூந்தலை இயற்கையான முறையில் பெறலாம்.