இத்தாலியில் இதன் பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் – பிரதமர் அறிவிப்பு

இத்தாலியில் மே  4-ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் விளைவாக நாளுக்கு நாள் பரவல், பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி,  30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இத்தாலியில் 1,97,675 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26,644 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் இத்தாலி பிரதமர் கியூசெப் கோண்டேமே-4ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.இதன் பின்  மக்கள் முகக்கவசம் அணிந்து தங்களது உறவினர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.