மகளுடன் பைக் ரைடு செய்யும் தோனி ! வடிவேலு காமெடியில் ஏடிட் செய்த சி.எஸ்.கே !

Default Image

மகளுடன் பைக் ரைடு செய்யும் தோனி. அந்த வீடியோவை வடிவேலு காமெடியில் ஏடிட் செய்த சி.எஸ்.கே !

கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸால் 26,917 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 826 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவழித்து வருகின்றனர்.

அந்தவகையில், பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி இந்த ஊரடங்கில் குடும்பத்தினருடனும், வீடியோ கேம்மிலும் செலவழித்து வருகிறார். தோனி தனது பண்ணை வீட்டில் தனது மகள் ஜிவாவுடன் பழைய பைக்கில் ஜாலியாக ரைடு சென்றுள்ளார். இந்த வீடியோவை வடிவேலு மற்றும் சரத்குமார் காமெடியான “வாமா மின்னலு” என்ற வசனத்தை சேர்த்து சி.எஸ்.கே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்