இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!
இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக சில பகுதிகளில், மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையை பொறுத்தவரை நேற்று மட்டும் காற்றுடன் கனமழை பெய்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையை பொறுத்தவரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழையோ இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை ஆய்வு மையம் கூறியுள்ளது.