மாஸ்டர் மீது அதீத நம்பிக்கையில் தளபதி விஜய்.! எந்த வழியில் படம் வெளியாகவுள்ளது தெரியுமா?!

Default Image

மினிமம் கியாரண்டி அல்லாமல், டிஸ்ட்ரிப்யூட்டர் முறைப்படி வெளியாக உள்ள முதல் விஜய் படம் மாஸ்டர் தான். இந்த முடிவுக்கு விஜய் சம்மதித்தாகவும் கூறப்படுகிறது.

தளபதி விஜய் நடிப்பில் இம்மாதம் 9ஆம் தேதி திரைக்கு வரவிருந்த திரைப்படம் மாஸ்டர். ஆனால் அதற்குள் கொரோனா ஊரடங்கு அமலில் வந்து தமிழ் சினிமா, இந்திய சினிமா தாண்டி உலக சினிமாவை புரட்டி போட்டுவிட்டது.

இதனால் இந்த லாக்டவுன் பிரச்சனைகள் எப்போது முடியும், திரையரங்கு எப்போது திறக்கப்படும், மக்கள் பயமின்றி திரைக்கு சகஜமாக வரப்போவது எப்போது என திரைதுறை கலைஞர்கள், தியேட்டர்காரர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய் படமென்றால் அது எப்போதும் மினிமம் கியாரண்டி என்ற முறையிலேயே வெளியாகும். அதாவது, படத்தை ஒரு தொகைக்கு விற்றுவிடுவார்கள் அதன் பிறகான லாப, நஷ்டம் தயாரிப்பாளரை சாராது. படத்தை வாங்கிய விநியோகிஸ்தர், தியேட்டர்காரர்களையே சாரும்.

ஆனால், தற்போது கொரோனா பிரச்சனை, தியேட்டருக்கு மக்கள் அனைவரும் வருவார்களா என்கிற பிரச்சனை என இருப்பதால், மாஸ்டர் படத்தை மினிமம் கியாரண்டி முறைப்படி இல்லாமல் டிஸ்ட்ரிப்யூட்டர் முறைப்படி வெளியிட விநியோகிஸ்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனராம். இந்த முறைப்படி படத்தின் லாப நஷ்டத்தில் தயாரிப்பாளருக்கும் பங்கிருக்கும்.

இந்த முறைப்படி ரிலீஸ் செய்யப்பட்டால், டிஸ்ட்ரிப்யூட்டர் முறைப்படி வெளியாக உள்ள முதல் விஜய் படம் மாஸ்டர் தான். இந்த முடிவுக்கு விஜய் சம்மதித்தாக கூறப்படுகிறது. மாஸ்டர் தோலிவியடைந்தால் அதன் நஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்வதாகவும் உறுதியளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மாஸ்டர் படம் மீது விஜய் அதீத நம்பிக்கை வைத்துள்ளார் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்