ஜாக்கிரதையா இருங்க.! சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா.!

Default Image

ஆந்திராவில் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் பொழுதுபோக்கிற்காக சீட்டு, தாயம் விளையாடிய 39 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கியுள்ள மக்களில் சிலர் பயனுள்ள வகையில் ஏதேனும் செய்து வருகின்றன. சிலர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றன. அதில் சிலர் சமூக விலகலை பின்பற்றாமல் நண்பர்களுடன் பல்வேறு விளையாட்டு விளையாடி வருகின்றன. அந்த வகையில் ஆந்திரா மாநிலத்தில் கிருஷ்ணா மாவட்டத்தில் பொழுதுப்போக்கிற்காக நண்பர்களுடன் சீட்டு மற்றும் தாயம் விளையாடிய சுமார் 39 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

இதுகுறித்து அம்மாவட்ட ஆட்சியர் இம்தியாஸ் கூறுகையில், கிருஷ்ணா மாவட்டம் லங்காவில் டிரக் டிரைவர் ஒருவர் நண்பர்களுடன் சீட்டு விளையாடியுள்ளார். அதன் அருகே பெண்களும் குழுவாக தாயம் விளையாடிக்கொண்டிருந்தன. அந்த டிரைவர் மூலமாக அங்கிருந்த 24 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. அதேபோல், கர்மிகா நகரிலும் சீட்டு விளையாடிய டிரக் டிரைவர் மூலமாக 15 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. இதனால் கடந்த 2 நாட்களில் சுமார் 40 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த டிரைவர் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர் எங்கெல்லாம் சென்று வந்தாரோ அங்கெல்லாம் சோதனை நடத்தப்பட்டு வவருகின்றன. இதற்கு காரணம் சமூக இடைவெளியை பின்பற்ற தவறியதே என்று தெரிவித்துள்ளார். இதனிடையே ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் எண்ணிக்கை 1061 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்