கொரோனா தாக்கியவர்களுக்கு மீண்டும் தாக்காது என்பதற்கான ஆதாரம் இல்லை – WHO

Default Image

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் அந்நோய் தாக்காது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அப்படி இருக்கும்போதும் நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுவரை உலகளவில் 29,23,783 பேர் பாதிக்கப்பட்டு, 2,03,319 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8,37,611 பேர் குணமடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை வளர்க்கும் ஆண்டிபாடி சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள் சில நாட்களுக்கு பின் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம், அவர்களுக்கு மீண்டும் தொற்று வராது என்றே இதுவரை கருதப்பட்டு வந்தது. டெல்லியில் ஆண்டிபாடி சிகிச்சைக்கு நல்ல பலன் கிடைப்பதாக மாநில அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தற்போது பின்வாங்கியுள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு மீண்டும் அந்நோய் தாக்காது என்பதற்கான ஆதாரம் இதுவரை இல்லை என்று தெரிவித்துள்ளது.

அதாவது, ஒருமுறை கொரோனா வைரஸ் தாக்கினால் மீண்டும் அவர்கள் கொரோனா தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது ஒன்றே இதற்கு முழுமையான தீவு என்று கூறியுள்ளது. கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்தை தயாரிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரை இதற்கான சரியான மருந்து கண்டுபிக்கவில்லை. எனவே, கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க சுமார் ஒரு வருடம் எடுத்துக்கொள்ளும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்