கொரோனா தடுப்பு மருந்துக்கான இறுதி கட்டத்தை எட்டிவிட்டோம்.! – ட்ரம்ப் தகவல்.!

Default Image

கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். விரைவில் செய்து முடிப்போம். என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமேரிக்கா மாறி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 9,25,758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,217 கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். கொரோனவை கட்டுப்படுத்த அமெரிக்காவில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பேசுகையில்,

கொரோனா வைரசால் 9 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அமெரிக்க குடிமகனும் விழிப்புடன் செயல்பட வேண்டும். சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும். சுகாதாரத்தை பேண வேண்டும். முககவசத்தை பயன்படுத்த வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பாகவும் படிப்படியாகவும் மீண்டும் முன்னேற செய்யவேண்டும்.அது எந்த வகையிலும் மக்களின் பாதுகாப்பை பாதிக்க கூடியதாக இருக்காது.
கொரோனாவை தடுக்கும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டோம். சோதனைக்கான கால அவகாசம் மிக அவசியம். விரைவில் செய்து முடிப்போம். என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
சூரிய ஒளியில் உள்ள புறஊதா கதிர்கள் ெகாரோனா மட்டுமின்றி எல்லா வைரசையும் அழித்துவிடும் என றிவியல் மற்றம் தொழில்நுட்பத்துறை இணை செயலாளர் வில்லியம் பிரையன் தெரிவித்ததை தொடர்ந்து, டிரம்ப் பேசுகையில், ‘புறஊதா கதிர்களை கொரோனா பாதித்தவர்களின் உடலில் செலுத்தி கொரோனாவை அளிக்க முடியுமா என விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்யவேண்டும்’ என்று ட்ரம்ப் ஆராய்ச்சியாளர்களிடம் கேட்டு கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்