இப்படி தான் நான் வேலை செய்வேன் – ஏ.ஆர்.ரகுமான்!

Default Image

எனது வீடு தான் நான் ஆரம்பக்காலத்திலிருந்து வேலை தொடங்கிய இடம். அது கோயில் போல.

கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருந்து தங்களால் என்ன முடியுமோ அதை செய்து கொண்டுள்ளனர். நடிகர்கள், அரசியல்வாதிகள், ஏழைகள் பணக்காரர்கள் என அனைவருமே வீட்டில் இருக்க வேண்டிய நிலைதான் தற்போது ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகை குல் பனாக் தனது வீட்டிலிருந்து திரைப்பட கலைஞர்களை யூடியூப் சேனல் மூலம் பேட்டி எடுத்து அதை பதிவேற்றி வருகிறார். இந்நிலையில் ஏ ஆர் ரகுமானை தற்போது அவர் பேட்டியெடுத்துள்ளார். அப்பொழுது உங்கள் வீட்டு வேலைகளை எப்படி செய்தீர்கள் என்று அவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.ரகுமான் நீண்ட காலமாகவே நான் ஸ்டூடியோவை வீட்டில் வைத்து தான் பணியாற்றிய வருகிறேன்.

படைப்பாற்றல் சம்பந்தப்பட்ட வேலை என்று வரும்பொழுது வலுக்கட்டாயமாக வேலை செய்ய முடியாது. 5 நிமிடங்களில் ஒரு யோசனை தோன்றலாம், அதேபோல ஒரு வருடமும் அந்த யோசனைக்கு காலம் எடுத்துக்கொள்ளலாம். நன்றாக வேலை செய்ய வேண்டுமானால் ஆரோக்கியமான மனநலம் தேவை.

நன்றாக தூங்கவேண்டும், அதிகம் சாப்பிடக்கூடாது. உயரிய தொழில்நுட்பம் ஆக இருந்தாலும் மனம் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீட்டில் இருந்து வேலை செய்கிறோம் என அசால்ட்டாக இல்லாமல், அதற்கேற்ற உடை உடுத்த வேண்டும். எனது குடும்பத்தினரின் ஸ்டூடியோவிற்கு வந்தால் கூட அதற்கு ஏற்றார் போல் தான் உடை அணிந்திருக்க வேண்டும்.

மேலும், வேலை செய்யும்பொழுது லேப்டாப் மொபைல் என அனைத்தையும் தொடுவதை தவிர்ப்பேன். அதிலிருந்து வரக்கூடிய சில செய்திகள் நம்முடைய கவனத்தை திசை திருப்பும். உள்ளுணர்வுகளுக்குள் ஆழமாக சென்று வேலையில் கவனம் செலுத்த  போய்விடும்.

அப்பொழுது தான் வேலை நேரத்தில் தொந்தரவு செய்யக் கூடாது என்பதை மற்றவர்கள் அறிவார்கள். அதுபோல ஊதுபத்தி, மெழுகுவர்த்தி ஆகியவற்றை வேலை செய்யக்கூடிய இடத்தில் ஏற்றி வைப்பேன், உள்ளே வரக் கூடியவர்கள் நல்ல அதிர்வுகளை உணர்வார்கள். மேலும் அவர்களுக்கு பிடிக்கவும் செய்யும். என்னுடைய வேலைத்தளம் ஒரு கோயில் போல தான்.

பல தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்துகிறேன். மேலும் அறிவு என்பது ஒரு கூட்டு உணர்விலிருந்து எல்லையற்ற சக்தி கிடைக்கிறது. அனைவருமே பல்வேறு விஷயங்கள் மீது நம்பிக்கை வைத்து இருக்கிறோம். ஆனால் அதற்கு வித்தியாசமான பெயர்களை தந்து இருக்கிறோம் தவிர வேறொன்றுமில்லை. ஏனென்றால், அவை அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து தான் வருகிறது, அதை அறியாமல் நம் சண்டை போடுவது துரதிர்ஷ்டவசமானது என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்