பாகிஸ்தானுக்கு வென்டிலேட்டர்கள் அனுப்பிவைப்போம்.! டொனால்டு ட்ரம்ப் அதிரடி.!
பாகிஸ்தானுக்கு கொரோனா சிகிச்சைக்கு தேவையான வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்க போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்டு ட்ரம்ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதோடு மூச்சு திணறலும் ஏற்படும். இதனால், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு வென்டிலேட்டர்கள் முக்கிய தேவையாக இருக்கிறது. இதனால், உலக நாடுகளுக்கு வென்டிலேட்டர்களின் தேவை அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, அமெரிக்காவிடம் வெண்டிலேட்டர் தேவைகளை கூறி உதவி கேட்டது. அதன் பேரில், பாகிஸ்தானுக்கு வென்டிலேட்டர்களை அனுப்பி வைப்பதாக கூறி அமெரிக்க அதிபர் டொனால்ட்டு ட்ரம்ப் அண்மையில் பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
அதே போல ஸ்பெயின், இத்தாலி, மெக்சிகோ, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கும் இதே போல வென்டிலேட்டர்களை அனுப்பி வைக்கப்போவதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.