மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

Default Image

மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது தொடர்ந்து பல நாடுகளை தாக்கி வருகிறது.  இதனால்,ஒவ்வொரு நாட்டு அரசும் இந்த  நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தலைமை மருத்துவ அதிகாரி பிரண்டன் மர்பியுடன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய  அவர், ‘கொரோனா தாக்கத்தின் முதல் நிலையை நாடு கடந்துள்ளது என்றும், மூச்சு திணறல், தொடர் இருமல், சளித் தொல்லை, காய்ச்சல், மூக்கில் நீர் வடிதல் போன்ற பிரச்சினை உள்ள அனைவருக்கும் நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும், அப்போதுதான் அதன் தாக்கத்தை முழுமையாக கண்டறிய இயலும் என்றும் கூறியுள்ளார்.

மேலும், முக கவசத்தை எல்லோரும் அணிய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. உடல் நலம் குன்றியவர்கள் மட்டும் அணிந்தால் போதும். இதனால் அவர்கள் மூலம் பிறருக்கு நோய் தொற்று பரவுவதை தடுக்கலாம் என்றும், விமான நிலையங்களில் முக கவசம் அணிவது கட்டாயமான ஒன்று. பள்ளிகளில் மாணவ, மாணவர்கள் 1.5 மீட்டர் அல்லது 4.5 சதுர மீட்டர் சமூக இடைவெளி விதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயமில்லை. பள்ளிகளில் ஒரு மாணவரிடம் இருந்து இன்னொரு மாணவருக்கு கொரோனா பரவுவதாக கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் கிடையாது என்று  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்