மருத்துவர் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை – சென்னை மாநகராட்சி

Default Image

கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்து நல்லடக்கம் செய்யப்பட்ட மருத்துவரின் சைமனின் உடலை இடமாற்றம் செய்ய வாய்ப்பில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கடந்த 19 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவர் சைமன் உயிரிழந்தார். இதையடுத்து உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய சென்ற இடத்தில பொதுமக்கள் இங்கு அடக்கம் செய்யக்கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேறு இடத்திற்கு சென்று மருத்துவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதையடுத்து கீழ்பாக்கம் கல்லறையில் கணவரின் உடலை மறு அடக்கம் செய்ய கடந்த 22 ஆம் தேதி மருத்துவரின் மனைவி ஆனந்தி கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சுகாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கையில் படி மறு அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என மாநகராட்சி விளக்கமளித்துள்ளது. மேலும் மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தியின் கோரிக்கையை ஏற்பது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்