#Attention : விதியை மீறினால் இரு பிரிவுகளின் கீழ் 6 மாதம் சிறை தண்டனை !
சுகாதாரத்துறையின் அறிவுறத்தலை மீறுவோருக்கு இரு சட்டத்தின் கீழ் ஆறு மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் மட்டும் 23452 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 723 பேர் உயிரிழந்துள்ளனர். 4813 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் “தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939ன் 62வது பிரிவு படி அறிவிக்கத்தக்க நோயாகவும், 76வது பிரிவு படி தமிழகம் தொற்று பரவ வாய்ப்புள்ள இடமாகவும், மக்கள் நடமாடும் பொது இடங்களில் சோப், தண்ணீர் வசதியுடன் கூடிய கைகழுவுமிடம் அமைக்கவும், வந்து போகும் அனைவரையும் பயன்படுத்தி எடுத்துறைக்க வேண்டும், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் கொரோனா அறிகுறிகளுடன் வரும் நோயாளிகள் குறித்து 24 மணி நேரத்துக்குள் சுகாதாரத்துறைக்கு தெரிவிக்கவும்” என சுகாதாரத்துறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களை ‘தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939’ மற்றும் ‘தொற்று நோய் சட்டம் 1987’ சட்டத்தின் கீழ் 6 மாதம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.