Covid19 : சிங்கப்பூர் பிரதமருடன் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார் !
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 27,48,938 பேர் பாதிக்கப்பட்டு, 1,92,153 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7,57,634 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் மட்டும் 23077 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 718 பேர் உயிரிழந்துள்ளனர். 4749 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், “கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். அப்போது கொரோனா பெரும் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்கள் மற்றும் சுகாதார சவால்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்” என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.