சென்னையிலிருந்து 55ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த சுமார் 2லட்சம் பேரை வலுகட்டாயமாக வெளியேற்றும் தமிழக அரசு: மே 17 இயக்கம் குற்றச்சாட்டு
சென்னையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுகின்றோம் என்ற பெயரில் சுமார் 2லட்சம் பேரை தமிழக அரசு தொடர்ந்து வெளியேற்றி வருகிறது. அப்படி வெளியேற்றப்படுபவர்களுக்கு சர்வதேச விதியான 5கிலோ மீட்டருக்குள் இடம் கொடுக்கப்பட வேண்டுமென்பதை மீறி 30கிலோ மீட்டர் தள்ளி இடம் ஒதுக்குவதும், பலருக்கு இடங்களே இன்னும் ஒதுக்கப்படாமலும், அப்படியே ஓதுக்கப்பட்ட இடம் நடுக்கடலில் இருக்கும் அநீதியும் நடக்கிறது.
மேலும் ஆக்கிரமிப்பு என்ற பெயரை சொல்லி ஏழை எளிய மக்களை வெளியே அனுப்பும் தமிழக அரசு. அதே பகுதிகளில் பல மாடி கட்டிடங்களை கொண்டிருக்கின்ற முதலாளிகளின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மண்ணின் மக்களை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வெளியேற்றுவதை மே 17 இயக்கம் வன்மையாக கண்டிப்பதுடன் இந்த செயலை தமிழக அரசு உடனடியாக நிறுத்தவேண்டுமென்று நேற்று (31.10.17) பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறோம்.