கிம் ஜாங் உடல்நிலை கவலைக்கிடம் ! – அமெரிக்க அதிபருக்கு ஏற்பட்ட சந்தேகம்.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை குறித்து வெளிவந்த தகவல்கள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகிறார்.
வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு புகைப்பிடிக்கும் வழக்கம் மற்றும் உடல்பருமனால் இதய நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் ஏப்ரல் 12ம் தேதி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்கு பின்னர் கிம் ஜாங் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 15ம் தேதியன்று வடகொரியாவின் தந்தை மற்றும் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் இல் சங்கின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதனையடுத்து அரசின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்காததால் அவரது உடல்நிலை குறித்து ஏராளமான வதந்திகள் பரவியது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் “வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடல்நிலை தொடர்பான தகவல்கள் வதந்தி என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.