கல்விக்கடன் செலுத்த நிர்பந்திக்க கூடாது.! – புதுச்சேரி கல்வித்துறை அறிவிப்பு.!

Default Image

புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களையும், மாணவர்களையும்  கல்விக்கட்டணம் செலுத்த கோரி நிர்வாகம் நிர்பந்திக்கக் கூடாது – புதுசேரி கல்வித்துறை

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

புதுசேரியில் இதுவரை 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி அதில் 3 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். புதுசேரியிலும் கொரோனா முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

இதனால், பலர் வேலையின்றி தவித்து வருவதால், புதுச்சேரியில் கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களையும், மாணவர்களையும்  கல்விக்கட்டணம் செலுத்த கோரி பள்ளி/கல்லூரி நிர்வாகம் நிர்பந்திக்கக் கூடாது  என புதுசேரி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்