கொரோனா பிரச்சனை சரியாகும் வரை ஆயுத கொள்முதல் நிறுத்தம்?!
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தற்போது நிதி செலவிடப்படுவதால், அனைத்து நிலைகளில் உள்ள ஆயுத கொள்முதல் நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பாதுகாப்புத்துறை சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
கொரோனா பரிசோதனை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், தொழிற்சாலைகள் இயங்காமல், இந்த இக்கட்டான சூழ்நிலையில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுத கொள்முதல் நடைமுறைகளை நிறுத்திவைக்கும்படி பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரையில், அனைத்து ஆயுத கொள்முதல் நடைமுறைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி முப்படைகளுக்கு பாதுகாப்பு துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதில், பிரான்சிடம் இருந்து வாங்க உள்ள ரஃபேல் விமானங்கள், ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு வாங்குவதற்கான பணம் பரிமாற்ற நடவடிக்கைகள், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிடமிருந்து வாங்கப்பட்ட உள்ள ராணுவ டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், துப்பாக்கிகள் போன்றவை செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா நிவாரணப் பணிகளுக்கு தற்போது நிதி செலவிடப்படுவதால், அனைத்து நிலைகளில் உள்ள ஆயுத கொள்முதல் நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும்படி பாதுகாப்புத்துறை சார்ப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.